ரஷ்யாவில் Sony Music, Amazon மற்றும் அமெரிக்க வங்கிகள்தங்களது சேவைகளை நிறுத்தியது !

Amazon, sony music and american banks stopped their services from russia for war

கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்ய - உக்ரைன் போர், 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் நிலயில், அந்நாட்டு மக்கள் அகதிகளாக பக்கத்து நட்பு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகினறனர். இந்த படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறது.

ரஷ்யா எவரது பேச்சிற்கும் செவி சாய்க்காத நிலயில், அதன் சேவைகளை ஒவ்வொன்றாக மற்ற நாடுகள் நிறுத்தி வருகிறது. ரஷ்யாவுடனான வங்கி வர்த்தக சேவைகளை விசா, மாஸ்டர் டெபிட், கிரெடிட் கார்டுகள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

இதைத்தொடர்ந்து, பிரபல முன்னணி நிறுவனங்களான, மெக் டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ், கோக-கோலா, பெப்சி, ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி, அல்ஷயா குரூப், கேப்சி, பிசா ஹட், பர்கர் கிங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவில் உள்ள தங்களது விற்பனை மையங்களை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தற்போது பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவுக்கு சோனி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

மேலும் அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் (Goldman Sachs Group In) மற்றும் ஜேபிமோர்க சேஸ் (JPMorgan Chase & Co) ஆகியவை ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, பிரபல முன்னணி வணிக நிறுவனமான அமேசான் ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தியுள்ளது.

Share this post