ஆண்கள் அனைவருக்கும் கட்டாய போர்..! மகளை கண்ணீர் மல்க பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்த தந்தை

Ukraine War Public Need Attend The War Compulsory

ரஷியாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளைக் கட்டிப்பிடித்து அழுது பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

உக்ரைனில் -வது நாளாக தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என இதுரை 137க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனில் கட்டாய ராணுவ சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 18 வயது முதல் 60 வரை உள்ள ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நடைபெற்று வருவதால் தனது மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பிய வைத்து தந்தை அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷ்யபடைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் போது இருவரும் அழும் வீடியோ ஒன்று பார்ப்பர்வர்களின் மனதை நொறுக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவில் பிங்க் நிற ஜாக்கெட்டை அணிந்திருக்கும் சிறுமியை தனது தந்தையை கட்டிப்பிடித்த அழும் வீடியோ வைரலாகி உள்ளது.

Share this post