Ponytail (குதிரைவால்) ஹேர்ஸ்டைலுக்கு தடை ! உணர்ச்சியை தூண்டும் விதமாக இருப்பதாக தடை அறிவிப்பு !

Pony tail hairstyle has been banned for school girls in japan

ஜப்பானில் உள்ள பள்ளிகளில் மாணவிகள் பள்ளிக்கு Ponytail என சொல்லப்படும் குதிரை வால் முறையில் தலை சீவி வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி தெரியும் இடத்தில மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வினோதமான விதிகள் விதிக்கப்படுவது ஜப்பானில் வழக்கம் எனினும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து, முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா அவர்கள் கூறியதாவது, ‘நான் இதுபோன்ற விதிகளுக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். ஆனால் தற்போது இந்த விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும், இது போன்ற விதிகள் சாதாரணமாகிவிட்டதாலும் மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை’ என கூறியுள்ளார்.

சிலர் இந்த தடையை பின்னோக்கு சிந்தனை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Share this post