அடேங்கப்பா...தங்கம் விலையை கேட்டா தலை சுத்திறும்...ஒரு பவுன் 1.50 லட்சமாம்: எங்கனு தெரியுமா?

Gold Price In Srilanka One Lakh Ffrty Thousand Today

கொழும்பு: இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சமாக உயர்ந்துள்ளதாக மக்கள் பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு பிறகு உலகில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இது இலங்கையில் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வால் இலங்கை மக்கள் அவதியில் உள்ளார்கள். இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரேடியாக ரூ 77 அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் பேருந்து கட்டணம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. சமையல் கேஸ், மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் ஏராளமான பேக்கரிகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

ஒரு பாக்கெட் பிரட்டின் விலை ரூ 150 முதல் ரூ 200 வரை உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூ 35 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 1.39 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

Share this post