7 வருட ரகசிய காதல்.. சோனாக்ஷி சின்ஹா திருமணம் முடிந்ததும் காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த கணவர்..!

Sonakshi Sinha's husband gifted a car worth 2 crores 260624

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

Sonakshi Sinha's husband gifted a car worth 2 crores 260624

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா. பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர், நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆனது.

இந்நிலையில், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி சின்கா என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது, நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி உள்ளார். தற்போது, ஜாஹிர் இக்பால் என்பவரை சோனாக்ஷி சின்கா காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

Sonakshi Sinha's husband gifted a car worth 2 crores 260624

இந்நிலையில், நடிகை சோனாக்ஷி சின்காவின் திருமணம் பற்றி தான் கடந்து சில வாரங்களாக பாலிவுட்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது லவ் ஜிகாத் என்றும் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது. அவர் ஜாஹிர் இக்பால் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பெற்றோர் சம்மதம் இல்லை என முதலில் செய்தி பரவினால் சோனாக்ஷி சின்காவின் அப்பா நடிகர் சத்ருகன் சின்கா மற்றும் அம்மா திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Sonakshi Sinha's husband gifted a car worth 2 crores 260624

இருப்பினும் சோனாஷியின் சகோதரர்கள் திருமணத்திற்கு வரவில்லை. இந்நிலையில், திருமணம் முடிந்ததும் சோனாசிக்கு அவரது கணவர் 2 கோடி ரூபாய்க்கு ஒரு சொகுசு காரை கிப்டாக கொடுத்திருக்கிறார். அந்த காரில், அவர்கள் இருவரும் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

Sonakshi Sinha's husband gifted a car worth 2 crores 260624

Share this post