டேய் இவன் டா.. நடிகரை அடிக்க சென்ற ரசிகர்கள்.. அஜித் செய்த தரமான சம்பவம்..!

actor-bava-laxmanan-talks-about-ajith-kumar-02072024

அஜித் தற்போது குட் பேட் அக்லி’ மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய அஜித் குறித்து பிரபல காமெடி நடிகர் பாவ லட்சுமணன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

actor-bava-laxmanan-talks-about-ajith-kumar-02072024

அதில், ஜனா படத்தின் போது அஜித் ரசிகர்கள் மொட்டை அடித்துக் கொண்டு அவரை பார்க்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் அஜித்துடன் போட்டோ எடுத்துக் கொண்டனர். அப்போது, அந்த கூட்டத்தை கிளியர் செய்ய செய்யும் வேலைகளை நான் பார்த்துக் கொண்டேன். பின்னர், ஒரு இடத்தில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த சிலர் இவன்டா யாருன்னு தெரியுது அவன்டா என்று கூறி என்னை அடிக்க வந்தார்கள்.

actor-bava-laxmanan-talks-about-ajith-kumar-02072024

உடனே நான் அஜித்தின் கேரவேனுக்கு சென்றேன். விஷயத்தை அவர் கேள்விப்பட்டதும் உடனடியாக அந்த ரசிகர்களிடம் வந்து டேய் எதுக்கு லட்சுமணனை அடிக்க வரீங்க அவர் அவரோட டியூட்டிய செய்தார். போட்டோ எடுக்க சொன்னீங்க எடுத்தாச்சு எல்லாரும் கிளம்புங்கடா என்று கூறிவிட்டார். அதன் பிறகு தான் அவர்கள் கிளம்பினார்கள் என்று பாவா லட்சுமணன் அந்த பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

Share this post