இதை மட்டும் வெளியில சொன்ன அவ்வளவுதான்.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபல வாரிசு நடிகர்..!

Actor Prabhu threatened actress Meena as a pet 010724

90ஸ் காலத்தில் இருந்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை மீனா. இவர் உச்ச நடிகர்கள் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். மீனா நடித்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் நம்பும் வகையில், ஒரு ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் மீனா.

Actor Prabhu threatened actress Meena as a pet 010724

முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மீனா அறிமுகமானார். இளம் வயதிலேயே ஹீரோயினான மீனா அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில், ஒவ்வொரு திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது.

Actor Prabhu threatened actress Meena as a pet 010724

கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடித்து வரும் மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, பிரபுவுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தது குறித்து பேசி இருந்தார். அப்போது, அவருடன் ஏற்கனவே நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தது குறித்து கூறினேன். அதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்த அவர், இந்த விஷயத்தை மட்டும் நீ வெளில சொன்ன அவ்வளவுதான் என்று விளையாட்டாக மிரட்டினார் என்று மீனா தெரிவித்துள்ளார்.

Share this post