இதெல்லாம் பண்ண முடியாது.. பிரபல இயக்குனரிடம் கறார் காட்டிய சமந்தா..!

samantha-s-refusal-to-act-in-mookuthi-amman-2-44020724

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

samantha-s-refusal-to-act-in-mookuthi-amman-2-44020724

சமந்தா பல்லாவரத்து பொண்ணு என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார். இவர் மாடலிங் துறைக்கு வருகையில் 500 ரூபாய்க்கு பணிபுரிய தொடங்கி, இப்போது பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இப்போதும், பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சையில் இருந்தார்.

samantha-s-refusal-to-act-in-mookuthi-amman-2-44020724

இந்நிலையில், சமீபத்தில் ஒரு வேடத்தில் நடிக்க கேட்டு அதை நிராகரித்து இருக்கிறார் சமந்தா. இயக்குனரும் நடிகருமான RJ பாலாஜி, சமந்தாவை சமீபத்தில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 2020-ல் நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் RJபாலாஜி இயக்கத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தின், 2-ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் எழுதி முடித்தப்பின் நயன்தாராவின் அம்மாவாக நடிக்க சமந்தாவை அணுகியிருக்கிறாராம். ஸ்கிரிப்ட் பிடித்தும் தேவதாசி வேடத்தில் நடிக்கமாட்டேன் என்று முடிவாக சமந்தா கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு காரணம், தன்னை அப்படி ஒரு வேடத்தில் பார்த்தவுடன் தன்னிடம் இருக்கும் கிளாமர், ரசிகர்களுக்கு பார்க்க ஆர்வமாக இருக்காது என்று சமந்தா கருதியதால் வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் இந்த வேடத்தில் நடிக்க நோ சொல்லியதாக கூறப்படுகிறது.

Share this post