சிவக்குமாருடன் முற்றிய பஞ்சாயத்து?.. சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா..!
புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல எதிர்ப்புகளை மீறி சூர்யாவுடன் 2006 இல் திருமணம் ஜோதிகாவுக்கு நடந்தது. இதற்கு பின்னர், சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா இரு குழந்தைகளை பெற்று வளர்த்து வந்தார். அதன் பின் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஜோதிகா. தமிழ் ,மலையாளம், இந்தி மொழிகளில் கமிட்டாகி ஜோதிகா நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க ஜோதிகா தன் மாமனார் சிவகுமார் வீட்டை விட்டு மும்பையில் குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டார் என்று கூறப்பட்டு வந்தது.
அதற்கேற்ப பல கோடி செலவில் மும்பையில் பங்களா வாங்கி அங்கேயே செட்டில் ஆகி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா சென்னை டிநகரில் பலகோடி செலவு செய்து பிரம்மாண்ட வீட்டினை கட்டுகிறார். ஆனால், நடிகை ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தால் நடிகர் சூர்யா வீட்டில் தங்குவது கிடையாதாம். பிரபல நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கி வருகிறார். இது சூர்யா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.