விஜய் - த்ரிஷா உறவு உண்மை?.. ரிலேஷன்ஷிப் குறித்து மறைமுகமாக பதிவிட்ட த்ரிஷா..!

/actress-trisha-reply-to-suchitra-and-relationship-rumours-with-thalapathy-vijay 040724

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.

/actress-trisha-reply-to-suchitra-and-relationship-rumours-with-thalapathy-vijay 040724

முன்னதாக, தமிழ் சினிமாவில் திரிஷா அறிமுகமாக 22 வருடங்களுக்கு மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவது உண்டு. விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நடிகை திரிஷா அடுத்த அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக த்ரிஷா குறித்து பல்வேறு கிசு கிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

/actress-trisha-reply-to-suchitra-and-relationship-rumours-with-thalapathy-vijay 040724

குறிப்பாக அவரை முன்னணி ஹீரோவான விஜய்யுடன் இணைத்துவரும் கிசுகிசுக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் த்ரிஷா தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மற்றவர்கள் ஒப்பினியன் பற்றி கவலை இல்லை என்பது போல அவர் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் த்ரிஷா விஜய் இருவருக்கும் இடையே எந்த உறவும் இல்லை என்பதை தான் த்ரிஷா மறைமுகமாக இவ்வாறு கூறி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this post