வரலட்சுமியின் கணவர் ஆபத்தானவர்?.. பல பெண்களுடன்.. சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..!
கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், வரலட்சுமியின் திருமணம் குறித்து பேசிய பத்திரிகையாளர் காந்தராஜ் நிகோலய் ஆபத்தானவராக கூட இருக்கலாம். அவர் முதல் மனைவியை டார்ச்சர் செய்திருக்கலாம். அது மட்டும் இன்றி பல பெண்களுடன் தொடர்பில் இருக்கலாம். இவர்களுடைய திருமணத்தில் வரலட்சுமி அம்மா கலந்து கொள்ளவில்லை.
நிக்கோலாய் வரலட்சுமி தனது 39 ஆவது வயதில் திருமணம் செய்திருக்கிறார். லேட் மேரேஜ் என்பதால், குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்த திருமணம் வெறும் சமூக பாதுகாப்புக்காக தான் நடந்திருக்கிறது. இதில், எந்த காதலும் இல்லை காரணம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று காந்தராஜ் கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.