விக்னேஷ் சிவனுக்கு இதுவும் போச்சா… - இனி நயன் தான் காப்பாத்தனும்..!

after-ajith-vignesh-shivan-pradeep-movie-droped-05072024

போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து, இவர் இயக்கிய நானும் ரவுடி தான் படம். அந்த படத்தில், நடித்த நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது, வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்துள்ளார்.

after-ajith-vignesh-shivan-pradeep-movie-droped-05072024

இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் கடைசியாக வந்தது காத்து வாக்குல ரெண்டு காதல் படம், இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து, அஜித் படத்தில் கமிட்டான விக்னேஷ் சிவன் இனி வேற தான் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே கைவிடப்பட்டு அஜித் விடாமுயற்சி பக்கம் சென்றார்.

after-ajith-vignesh-shivan-pradeep-movie-droped-05072024

அதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கு தாவினார். ஆனால், தற்போது இந்த படமும் டிராப்பாகிவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்த செய்தி உண்மையாக இருந்தால் கண்டிப்பாக விக்னேஷ் சிவனின் திரைப்பயணம் கேள்விக்குறி தான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this post