இந்த கேள்வி கேட்டாலே Irritate தான் ஆகுது.. - கடுப்பில் ஸ்ருதி ஹாசன்..!
கோலிவுட் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர், தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில், ஸ்ருதி ஹாசனும் சாந்தனுவும் நீண்ட காலமாக காதலித்து வந்து ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது, பிரிந்து விட்டனர். இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது, ரசிகர்களுடன் ஆடுவார். இந்த நிலையில், தற்போது ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன் நான் கல்யாணம் பண்ண மாட்டேன். திருமணம் குறிப்பிட்ட கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்ற ஸ்ருதிஹாசன் கடுப்புடன் பதில் கொடுத்துள்ளார்.