சினேகாவுக்கு நடந்த ஆக்சிடென்ட்.. ஓடிய ரத்தம், உடைந்த கண்ணாடிகள்..!
புன்னழகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட் இல்லையென்றாலும் சினிமாவில் நிறைய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது, விஜயுடன் கோட்பாடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சினேகா இடம்பெறும் ஒரு பாடலும் வெளியாகி இருந்தது.
படங்களை தாண்டி சினேகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நடன நிகழ்ச்சி நடுவராக இருந்து வந்தார். வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பிஸியாக இருக்கும் சினேகா சொந்தமாக ஒரு புடவை கடையும் திறந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த சினேகா குறித்து தெரியாத தகவல் ஒன்றை நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது பேட்டி ஒன்றிய பகிர்ந்துள்ளார்.
அதில், ஸ்ரீகாந்த், நடிகை சினேகாவுடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்துள்ளார். அப்போது, நடந்த ஒரு சம்பவம் குறித்து ஸ்ரீகாந்த் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், அவர் ஏப்ரல் மாதத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சினேகாவிற்கும் விபத்து ஆகிவிட்டது. இரண்டு பேருமே வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்து வந்தோம்.
இந்த படத்தில் நடிக்கும் சினேகாவிற்கு நடந்த அந்த பயங்கர விபத்தை நினைக்கும் போது இப்போதும் சிலிர்த்து விடுகிறது. அவரது கார் விபத்து ஏற்பட்டு சினேகா ரத்தவெள்ளத்தில் இருந்தார். அவருடைய முதுகெலும்பு உடைந்து போய் இருக்கும். இந்தநிலையில் அவர் இருந்த கார் கதவுகள் திறக்க முடியாமல் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து போனது. அந்த சம்பவத்தை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த நிலையில், சினேகா இருந்தார் அப்போது, எனக்கும் ஒரு விபத்து ஏற்பட இருவருமே மருத்துவமனையில் இருந்து வந்து தான் அந்த படத்தில் நடித்து முடித்தோம் என்று தெரிவித்துள்ளார்.