ஏய் கிளம்பு.. ரசிகரை துரத்தி விட்ட வீடியோ.. நாகர்ஜூனாவை தொடர்ந்து சிக்கிய தனுஷ்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார்.
தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், தனுஷ் இன்று ஜுஹு பீச்சில் ஷூட்டிங் காக வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது ரசிகர்கள் சிலர் செல்போனில் அவரை போட்டோ எடுக்க முற்பட்டிருக்கின்றனர். அவர்களே தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதாகவும், கிளம்பு என்றும் மிரட்டியதாகவும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
நெட்டிசன்களும் தனுஷின் இந்த செயல் குறித்து கடுமையாக விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். பொது இடத்தில், ஷூட்டிங் நடக்கும்போது மக்களை இப்படித்தான் நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர். நாகர்ஜுனா சில தினங்களுக்கு முன்பு ஏர்போர்ட்டில் வந்த போது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட வீடியோ வைரலானது.
நடிகர் தனுஷும் நாகார்ஜுனாவுக்கும் பின்னால் நடந்து வந்த நிலையில், அந்த சம்பவத்தை பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இது பெரிய சர்ச்சையானதை தொடர்ந்து, நாகார்ஜுனா மன்னிப்பு கோரி இருந்தார். இதே போல், இனிமேல் நடக்காது எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.