உலக நாயகனுக்கே குறும்படம் மேக் பண்ணி ரிலீஸ் செய்த 'விக்ரம்' படக்குழுவினர் ! வைரலாகும் வீடியோ !

Vikram glimpse video getting viral on social media

மாநகரம், கைதி போன்ற 2 லோ பட்ஜெட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் திரையுலகத்தினரை தன் பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால், இவருக்கு 3வது படமே தளபதியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என பிரபலங்களை ஒன்றிணைத்து படத்தை உருவாக்கினார்.

Vikram glimpse video getting viral on social media

கடந்த ஆண்டு, இந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது கமல்ஹாசன் ஹீரோவாக வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி ஷூட்டிங் முடித்துள்ளார்.

Vikram glimpse video getting viral on social media

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, நரேன், செம்பன் வினோத், அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Vikram glimpse video getting viral on social media

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக லோகேஷ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.

Vikram glimpse video getting viral on social media

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் ‘விக்ரம்’ உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3-ம் தேதி முதல்” என்று பதிவிட்டுள்ளார்.

Vikram glimpse video getting viral on social media

படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Share this post