Paytm Payment வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை - ரிசர்வ் வங்கி அதிரடி

Reserve bank stops new users to register in paytm payments bank until further notice

பேங்க் பரிவர்த்தனைகளை மிக எளிதாக்கும் வகையில், google pay, paytm, phonepe போன்ற பல ஆப்கல் செயல்முறைக்கு வந்துவிட்டது. இதனால், பெட்டி கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை போன் மூலமே பேமெண்ட் செய்யும் வசதிகள் ஏராளமாக வந்துவிட்டது.

Reserve bank stops new users to register in paytm payments bank until further notice

அந்த வகையில், இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவத்தனை செயலியில் முன்னணி வகிக்கும் சில நிறுவனங்களில் முக்கிய ஆப் பேடிஎம்’க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. யுபிஐ மூலம் பணபரிவர்த்தனை செய்வோர் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ரிசர்வ் வங்கி வகுத்துக் கொடுத்த விதிமுறைகளின் கீழ் இயங்கி வரும் இந்த ஆப்களை நிர்வகிக்க தனித்தனியாக வங்கிகள் செயல்படுகின்றன.

அந்த வகையில், பணப் பரிவர்த்தனை விதிகளை முறையாகப் பின்பற்றாத விவகாரத்தில் Paytm Payment வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், தகவல் தொழில்நுட்ப பிரிவின் படி கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நிபுணரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை ஆய்விற்குப் பின் புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Share this post