Viral Post : ரஷ்யா அதிபர் புடினை கொன்றால் ரூ 7.67 கோடி.. எச்சரிக்கை விடுத்த மெட்டா நிறுவன தலைவர்

Meta head warns for poster against putin

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக பிரபல மெட்டா நிறுவனத்தின் சேவைகளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவை ரஷ்யாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக நலன் கருதி ரஷ்ய ஆதரவு பதிவுகளையும் நீக்கியது மெட்டா நிறுவனம். ரஷ்ய வர்த்தக விளம்பரங்களையும் முடக்கியது.

Meta head warns for poster against putin

தற்போது, ரஷ்ய அதிபருக்கு எதிராக கொலை மிரட்டல் பதிவுகளை சிலர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், ரஷ்ய அதிபர் புடினை கொன்றால் 1,000,000 அமெரிக்கன் டாலர் (இந்திய ரூபாய் படி 7,67,18,000) பரிசுத் தொகை வழங்கப்படும் என புடினின் புகைப்படத்துடன் பதிவுகள் வெளியாகி உள்ளன.

Meta head warns for poster against putin

இதுகுறித்து, மெட்டா நிறுவனம் சார்பாக நிக் கிளெக் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா போர் தொடுப்பது கண்டிக்க தக்கது என்றாலும், ரஷ்யர்களுக்கு எதிரான நலனுக்கு எதிரான செயலை ஏற்க முடியாது. ஒரு நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வதற்கான பதிவுகளை எங்களது தளங்களில் அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

Share this post