தமிழ்நாட்டில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு ! 1000த்தை நெருங்கு கேஸ் விலை !

Gas cylinder price hike in tamilnadu

இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு (அதாவது ஹோட்டல் போன்றவற்றிற்கு) 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 2021 அக்டோபர் மாதம் வீட்டு சிலிண்டர் 915.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும் அதன் விலையில், கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என நான்கு மாற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இன்று (மார்ச் 22) முதல் ரூ.50 அதிகரித்து, சென்னையில் 915.50 ரூபாயில் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் கடந்த 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையல், இன்று 76 பைசா அதிகரித்துள்ளது.

Share this post