முழு ஊரடங்கு அறிவிப்பு : சீனாவில் 2 ஆண்டுகளுக்கு வீரியம் எடுத்துள்ள புதிய வகை கொரோனா !

Full lock down announcement in china particular areas due to corona spread

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் தொடங்கி 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, வழிமுறைகள் விதிக்கப்பட்டு பலவிதமான விதிமுறைகள் விதித்தும் இன்னும் பாதிப்பு எற்பட்டு வருகிறது.

தற்போது உரு மாறி ஓமைக்ரான் பரவலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் மொத்த பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த சாங்சன் பகுதியில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகரில் தான் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது. இதையடுத்து, இந்த சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எந்த மாதிரியானது, அதன் பரவும் வேகம் என்ன, போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட 255 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் பாதிக்கப்பட்ட 4,194 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக சீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் தொற்று அதிகரிப்பு தீவிரமாகியுள்ளது.

Share this post