மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஆபர்.. Sorry கேட்ட ப்ளிப்கார்ட் நிறுவனம் !

Flipkart asks sorry for the offer announced for women's day

மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவது வழக்கம். இதற்காக நிறைய மகளிர் சார்ந்த பொருட்கள், கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவதும் வழக்கம். அந்த வகையில் பிரபல ஆன்லைன் விற்பனை செய்யும் ப்ளிப்கார்ட் நிறுவனம் செய்த விளம்பரம் ஒன்று பிரச்சனையாக மாறிவிட்டது

அதாவது மகளிர் தினத்தை முன்னிட்டு, சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என ப்ளிப்கார்ட் நிறுவனம் செய்த விளம்பரத்திற்கு பெண்களுக்கு உகந்தது சமையலறைதான் என்ற கருத்தை மறைமுகமாக கூறுவதாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு ப்ளிப்கார்ட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளது.

Flipkart asks sorry for the offer announced for women's day

Share this post