கதாநாயகியாக அறிமுகமாகும் ஜோனிட்டா.. ஹீரோ இவர்தான்..

Singer jonita gandhi debut film surarai potru krishna kumar to act as hero

கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரேயா கோஷல், சக்திஸ்ரீ கோபாலன், சைந்தவி, சின்மயி வரிசையில் ஜோனிட்டா காந்தி இடம் பிடித்துள்ளார். என்னதான் பாடகி தான என சொன்னாலும், டாக்டர் படத்தில் செல்லமா பாடலின் lyrical வீடியோவில் இவரை பார்த்து ஹீரோயின் விட சூப்பரா இருக்காங்க என சொல்லாதவர்களே கிடையாது.

தற்போது, காதலர் தினம் அன்று, தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இதிலும் ஜோனிட்டா காந்தியை பார்த்த பலரும் பூஜா விட இவங்க சூப்பர் என சொல்லி வருகின்றனர்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி படத்தில் வரும் மனம் மனம் மென்டல் மனமே பாடலை பாடி இளசுகள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து காற்றுவெளியிடை, வேலைக்காரன், டாக்டர் போன்ற படங்களில் பாடல் பாடியுள்ளார்.

தற்போது, பாடகியாக வலம் வரும் ஜோனிட்டா காந்தி, விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாக உள்ள ‘walking talking strawberry ice cream’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Singer jonita gandhi debut film surarai potru krishna kumar to act as hero

இப்படத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணா குமார் கதாநாயகனாக நடிக்கிறார். விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Singer jonita gandhi debut film surarai potru krishna kumar to act as hero

Share this post