புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்த SK !

Sivakarthikeyan requests pondicherry cm for rates and informs about his shooting

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தை தொடர்ந்து, டான் ஷூட்டிங் நிறைவடைந்து மே மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan requests pondicherry cm for rates and informs about his shooting

நேரடியாக தெலுங்கு மொழியில் வெளியாகவிருக்கும் இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 20வது படமான இதில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன், நவீன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

காரைக்குடியில் தொடங்கிய இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இதற்காக சிவகார்த்திகேயன் புதுச்சேரி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் மரியாதைக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அலுவலகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

அப்போது, புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என SK புதுவை முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில், படப்பிடிப்புக்கான வரி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post