ஏ. ஆர். ரஹ்மான் துபாய் ஸ்டூடியோவில் தமிழக முதல்வர் ! வைரலாகும் புகைப்படங்கள் !

Stalin and arrahman in rahmans dubai studio photos getting viral

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். அனைத்து மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வரும் ரஹ்மான், இசைப்புயலாக வலம் வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை, ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Stalin and arrahman in rahmans dubai studio photos getting viral

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில், இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்தார்.

Stalin and arrahman in rahmans dubai studio photos getting viral

இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் துபாயில் உள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு தனது குடும்பத்துடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார்.

Stalin and arrahman in rahmans dubai studio photos getting viral

இந்நிகழ்வின் போது, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Stalin and arrahman in rahmans dubai studio photos getting viral

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “துபாய் எக்ஸ்போ 2022 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை காண்பித்தார். தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!” என்று பதிவிட்டுள்ளார்.

Share this post