லேடி புஷ்பாவாக மாறிய ஷிவானி.. கிளாமர் குறையாமல் ஸ்ரீவள்ளி பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ

Shivani narayanan dancing for srivalli song from pushpa movie

பகல் நிலவு சீரியலில் தனது 17 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர் ஷிவானி நாராயணன். அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

ஊரடங்கு காலத்தில் தனது கவர்ச்சி மற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் எப்போதும் இருந்து வந்த இவரை பிக் பாஸ் டீம் 4வது சீசனில் களமிறக்கியது. காதல் கிசுகிசுக்களில் சிக்கியபோதும், இவரது சோசியல் மீடியா பாலோயர்ஸ் இவரை கை விடவில்லை.

பிக்பாஸ் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம், வெற்றிக்கு ஜோடியாக பம்பர், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்து பிசியாக உள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மாடர்ன், டிரெடிஷனல் என எந்த உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு மவுசு அதிகம்.

அந்த வகையில், ஆரஞ்சு கலர் உடையில் இடுப்பழகை காட்டியபடி புஷ்பா படத்தில் பேமஸான ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடி வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Share this post