கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரியா பவானி சங்கர்.. தூக்கலான போட்டோஸ் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர்கள் என அனைவரும் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து புகழடைந்து வருகின்றனர். அந்த வகையில், புதிய தலைமுறை முதல் பல பிரபல செய்து சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
இதனைத் தொடர்ந்து, இவரது புகைப்படங்கள் பெரிதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது. செய்தி வாசிப்புக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் தொடரில் நடித்து வந்தார். அதன் பின்னர், திரையுலகில் வைபவ் ஜோடியாக மேயாத மான் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
இப்படத்திற்கு பல விருதுகள் பெற்ற இவர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே போன்ற திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது மட்டுமின்றி, டைம் என்ன பாஸ் என்னும் வெப் சீரீஸ் தொடரில் நடித்துள்ளார்.
சமீபத்தில், திருச்சிற்றம்பலம், ஹாஸ்டல் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி, மேலும் அகிலன், குருதி ஆட்டம், பொம்மை மற்றும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். படங்களில் பிஸியாக இருந்தாலும் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.