அலையில் மிதக்கும் அழகு பால் பணியாரம்.. பளீச் அழகில் வசீகரிக்கும் மாளவிகா மோஹனன்!

கல்லூரி படிக்கும் காலம் முதலே விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த மாளவிகா மோஹனன், அதன் மூலம் மலையாள மொழியில் பட்டம் போலே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரிஷா போன்றோர் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர், மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் OTT தளத்தில் நேரடியாக வெளியான நிலையில், பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
மேலும், யுத்ரா திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா, அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். பிற நடிகைகளை போல போட்டோஷூட் கலாச்சாரத்தை விடாது பின்பற்றி வரும் மாளவிகா, தற்போது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பாலோயர்ஸ் ஏராளம்.