Viral Video: 'லவ் டுடே தனுஷ்க்காக பண்ண கதையா? தனுஷ் மாதிரி நடிக்க Try பண்றீங்களா?' பிரதீப் 'நச்' பதில்
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த படத்தில் பிரதீப் அவர்களின் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு ஹீரோவை போல் அல்லாமல் தனுஷ் போன்று பக்கத்து வீட்டு பையன் போல இவரது தோற்றமும் நடிப்பும் தான் இந்த படத்திற்கு பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம். இப் படத்தின் பல காட்சிகளில் இவரது நடிப்பு பிரபு தேவா, எஸ்.ஜே சூர்யா, தனுஷ் போன்றவர்களின் நடிப்பை நினைவுபடுத்தியது போல இருந்தது. அதிலும் குறிப்பாக பல காட்சிகளில் இவரது நடிப்பில் தனுஷை இமிடேட் செய்வது போலவே இருந்தது.
இப்படி ஒரு நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரதிபிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் படத்தில் உங்களை பார்க்கும் போது தனுஷை பார்ப்பது போலவே இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அதேபோல திரைக்கதை பாக்கியராஜ் கதை போல இருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பிரதீப், ‘நீங்க சொல்வதை பார்த்தால் இதில் கொஞ்சம் அதுல கொஞ்சம் என்று மிக்சி மாதிரி தான் இருக்கிறது. அது அப்படியெல்லாம் இல்லை நீங்கள் சொல்லும் பெயர்களை எல்லாம் மிகப்பெரிய பெயர்கள் நான் இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன்.
அதனால் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து’ பத்திரிக்கையாளர், நீங்கள் அழும் போது கூட தனுஷ் சார் மாதிரி Body Language, style எல்லாம் அப்படியே இருக்கிறது என்று சொன்னதற்கு ஒருவேளை உத்தமன் பிரதீப் அப்படி பண்ணுகிறார் என்று நினைக்கிறேன், இந்த கதாபாத்திரத்திற்கு நான் ஒரு வடிவம் வைத்து இருந்தேன் அதை தான் நான் செய்தேன் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த படம் தனுஷ் சாருக்காக பண்ணாதா என்று கேட்டதற்கு இல்லை இது எனக்காக பண்ண கதை என்றும் கூறியுள்ளார்.
#PradeepRanganathan - Kutty #Dhanush 😄💯👌#LoveToday pic.twitter.com/SC4rf5kMNV
— VCD (@VCDtweets) November 7, 2022