ஆமிர் கான் மகளுக்கு பொது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத போது முத்தம் கொடுத்த காதலன்.. வைரல் வீடியோ

பாலிவுட் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவர் அமீர் கான். அமீர்கானின் மூத்த மனைவி ரீனா தத்தாவிற்கு பிறந்தவர் ஐரா கான். ஐரா கான், தனது 25வது பிறந்தநாளை அமீர் கான், ரீனா தத்தா, சகோதரர் ஜூனைத் கான், அமீர்கானின் மகன் ஆசாத் ராவ் கான், ஐரா கானின் காதலர் நுபுர் ஷிகாரே ஆகியோர் உடன் கொண்டாடினார்.
ஐரா கான் பிறந்தநாள் அன்று, அவர் பிகினி உடையில் தனது 25வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இதுதவிர காதலனுடன் நீச்சல் குளத்தில் ஐரா கான் ஜாலியாக குளிப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின.
தொடர்ந்து இவர்கள் இருவரின் ரொமான்டிக் புகைப்படங்கள் கூட அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகும். இந்நிலையில், சமீபத்தில் தனது காதலி ஐராவிற்கு மோதிரம் அணிந்து தனது காதலை நூபுர் கூறியுள்ளார். உடனடியாக நூபுர் காதலை ஏற்றுக்கொண்ட ஐரா திருமணத்திற்கு ஓகே என்று கூறியுள்ளார்.
அதன்பின் இருவரும் முத்தமிட்டு கொண்டனர். இந்த வீடியோவை ஐரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பாலிவுட் திரையுலகில் இந்த வீடியோ படுவைரல்.
இதோ அந்த வீடியோ..