ஏர்போட்டில் பாதுகாவலரை பார்த்து அஜித் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், AK61 படத்தின் பெயர் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில், படத்தின் பெயர் ‘துணிவு’ எனவும், அதனுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டனர் படக்குழுவினர்.
இன்று படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. அஜித் நடிக்கும் துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாகக் இந்த கதையாம்.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். அதாவது, கடந்த 1985ம் ஆண்டு 12 கடந்த 15 சீக்கியர்கள் காவல் காவல்துறையின் ஆடை அணிந்து வங்கியில் கொள்ளை அடிக்க பயங்கரமான ஆயுதங்களுடன் சென்றிருக்கின்றனர். அவர்கள் வங்கியில் கொள்ளை அடித்த மொத்த பணத்தின் மதிப்பு மட்டுமே 4.5 மில்லியன் அமெரிக்க டாலராம்.
இந்திய வரலாற்றிலேயே வங்கிக் கொள்ளையில் இது தான் மிகப்பெரிய கொள்ளை என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்த வங்கி கொள்ளை நடந்த போது வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள், வங்கியை கொள்ளையடித்தவர்கள் என யாருக்குமே ஒரு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. அந்த அளவிற்கு சூப்பர் மாஸ்டர் பிளான் போட்டு வங்கியை கொள்ளை அடித்து இருந்தார்கள்.
இதை போலீசாரே பாராட்டியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பஞ்சாபில் நடந்த இந்த வெளியாகி சம்பவத்தை மையமாக வைத்து தான் வினோத் அவர்கள் அஜித்தின் துணிவு படத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் பர்ஸ்ட் லுக்கில் கூட ‘கைரேகை, ரூபாய் நோட்டில் இடம்பெறும் எழுத்துக்கள்’ என்று இடம்பெற்று இருப்பதை பார்க்கும் போது இது கண்டிப்பாக ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் போல தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பாங்காங் செல்கின்றனர். இதற்காக அஜித் பேங்காங் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றுள்ளார். அங்கு பாதுகாவலர்களை பார்த்ததும் அவர்களுக்கு சலியூட் அடித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
#AjithKumar & Manju Warrier spotted in Chennai airport.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 24, 2022
They are off to Bangkok to complete the final schedule of #Thunivu. pic.twitter.com/oNHf7Y1TUJ