மாடர்ன் மயிலு.. இது ஒரு மாதிரி நல்லாதான் இருக்கு.. அனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

சோட்டா மும்பை மற்றும் Kadha Thudarunnu போன்ற மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனைத் தொடர்ந்து, 4 ப்ரெண்ட்ஸ், 5 சுந்தரிகள், நயனா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில், அஜித், திரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் அஜித் மகளாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படத்தில் நயன்தாரா மகளாக நடித்தார். பின்னர், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மீண்டும், விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா மகளாக நடித்தார்.
தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் அனிகா, தற்போது மாமனிதன் மற்றும் Powerfully Yours Vedha என்ற 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதன் நடுவே, குயின் என்னும் வெப் சீரீஸ், சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்துள்ளார்.
தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ள அனிகா, கவர்ச்சி காட்டி போட்டோஸ் மற்றும் விடியோஸ் பதிவிட தொடங்கியுள்ளார்.