மிதாலி ராஜாக மாறிய டாப்சி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தீவிர பயிற்சியில் டாப்ஸி.. வைரலாகும் ஸ்டில்ஸ் !
ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி போன்ற ஹாரர் மூவிகளில் தோன்றியிருந்தார். பாலிவுட் நடிகையான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரையுலகிலும் முன்னணி நாயகியாக உள்ளார்.
தற்போது, இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான மிதாலி ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் டாப்ஸி நடிக்கிறார். வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் வெளியீட்டு தேதியை டாப்ஸி பண்ணு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஷபாஷ் மிதுவின் அறிவித்துள்ளனர்.
படம் பற்றி பேசுகையில், மிதாலி ராஜி 8 வயது குழந்தையாக தனது கனவுடன் தொடங்கும் அவரது வாழ்க்கை பயணத்தை இந்த படம் காட்டுவதாக கூறியுள்ளார்.
இதற்காக அவரிடம் நீண்ட பயிற்சி மேற்கொண்டதாகவும், தனியே நிறைய பிராக்டிஸ் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படம் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.