விஜய்க்கு பிடித்த மூன்று நடிகைகள் …. அந்த விஷயத்தில் அவங்க எல்லோரும் ம்ம்ம்ஹ்!
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக டாப் அந்தஸ்திலிருந்து வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் கடைசி கட்ட வேலைகள் மற்றும் ரிலீசுக்கு தயாராகி அதன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனுடையே நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி அதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படியான சமயத்தில் நடிகர் விஜய்க்கு பிடித்த மூன்று நடிகைகள் இவர்கள் தான் என்ற ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை அமலா, ரேவதி மற்றும் நதியா குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் மூன்று பேர்தான் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்தமான பேவரைட் நடிகைகளாம். அவர்கள் மூன்று பேருமே ஒரு விஷயத்தில் எல்லோரும் ஒத்துக் போவார்கள். அதாவது மிகவும் அமைதியான பவ்யமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சாந்தமான நடிகையாக ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்தவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் இந்த குணம் கிட்டத்தட்ட விஜய்க்கு ஒற்றுப்போகும். ஆம் நடிகர் விஜய்யின் கேரக்டரும் அது போன்றுதான். அதனால் தான் என்னவோ இந்த மூன்று நடிகைகளையும் விஜய்க்கு ரொம்ப பிடிக்குமோ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.