ச்சே… நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களே!! "தீனா" படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ - யார் தெரியுமா?
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக இருந்த திரைப்படம் தான் தீனா. 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க படத்தை ஜெயபிரசாந்த் என்பவர் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அஜித்தின் கெரியரிலே மிக முக்கிய படமாக பார்க்கப்பட்டது. திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை லைலா நடித்திருந்தார். இவர்களுடன் சுரேஷ் கோபி, நக்மா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.
இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத்தான் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராகவே அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடத்தை பிடித்தது.
இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் கூட இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டும் விற்று காலி ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இன்று வரை இந்த திரைப்படத்திற்கான மவுஸ் குறையவே இல்லை.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ அஜித் இல்லையாம் நடிகர் பிரஷாந்த் தானாம். ஆம் இந்த படத்தின் கதையை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முதலில் பிரசாந்திடம் சென்று தான் கூறியிருக்கிறார்.
அப்போது பிரசாந்தின் தந்தையான தியாகராஜன்… பிரசாந்த் இப்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கால்ஷீட் கொடுப்பதற்கு நாட்கள் இல்லை எனவே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொன்னேன் .
ஆனால்.. அவர் உடனே படம் எடுக்க வேண்டும் என்று கூறி கூறினார். அதனால் அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என தியாகராஜன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஒருவேளை பிரசாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் சரிந்து போகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.