U1 பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் 4வது பாடல் வெளியானது!

goat-movie-4rth-song-will-release-tomorrow

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா , யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார்கள்.

goat-movie-4rth-song-will-release-tomorrow

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியான நிலையில் நான்காவது பாடல் குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி G.O.A.T படத்தின் “மட்ட” என்கிற 4வது பாடல் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான இன்று நாலாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Share this post