அரபிக்குத்து பாட்டு நா எழுதல.. உண்மையை சொன்ன SK.. அட இவரு பாட்டு எழுதினாரா !
தொகுப்பாளராக தனது கலை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக வளர்த்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், பாடல் எழுத்தாளர் என பல வடிவில் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
கோலமாவு கோகிலா ‘கல்யாண வயசு தான் வந்திருச்சு’, நம்ம வீட்டு பிள்ளை ‘காந்த கண்ணழகி’, டாக்டர் ‘செல்லம்மா’ , ‘ஓ பேபி’ , எதற்க்கும் துணிந்தவன் ‘சும்மா சுர்ருன்னு’ போன்ற வெற்றி பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் அரபிக் குத்து பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் படம் வருவதற்கு முன்பே வெளியாகி செம வைரல் ஆனது.
சமூக வலைத்தளங்களில் மற்றும் யூடியூப் சேனலில் ரெக்கார்ட் பிரேக் செய்து வரும் இப்பாடல் பற்றிய அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என நினைத்துக் கொண்டிருக்க, சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில் உண்மையில் அந்த பாட்டை நான் எழுதவில்லை, அனிருத் சில அரபி வார்த்தைகள் எல்லாம் சேர்த்து பாடி எனக்கு அனுப்பியிருந்தார்.
அதை கேட்டு சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகள் சிலவற்றை சேர்த்தேன் மத்தபடி இது அவருடைய பாட்டுதான் என கூறியுள்ளார்.