Bride-To-Be... அப்போ இத கொஞ்சம் படிக்கலாமே..

Important points to be taken care by bride girls before marriage

பெண்கள் பலரும் தங்களது இளம் வயது முதல் ஆசைப்பட்டு எதிர்நோக்கும் போது பதட்டமடையும் ஒரு நிகழ்வு திருமணம். என்னதான் பிரெப்ரெஷன் பண்ணினாலும் ஒரு சிலதுல கவனம் செலுத்த வேண்டியது ரொம்ப முக்கியம். அதுக்கான டிப்ஸ் இதோ..

1. சரும பராமரிப்பு (Skin Care)

திருமணத்திற்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே, சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெயிலில் அதிகம் செல்லாது இருப்பது, அதிகம் தண்ணீர் பருகுவது என இருந்தால் திருமண நாளின்போது முகத்தின் பொலிவை அதிகரிக்கும். ரசாயன அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக இயற்கை முறையில் தயாரித்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

2. உணவில் கவனம் தேவை (Food Care)

என்னதான் மேக்கப், பேசியல் என பயன்படுத்தினாலும், நாம் உட்கொள்ளும் சத்தான உணவில்தான் சருமத்தின் உண்மையான ஆரோக்கியம் உள்ளது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். டின் புட்ஸ், பாஸ்ட் புட், பேக்கெட் புட் தவிர்த்து காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொள்வது சிறந்தது.

3. உறக்கம் (Sleep Routine)

உணவு, உடல் என நமது ஆரோக்கியத்திற்கு உறக்கம் அவசியமானது. எட்டு மணி நேரம் ஆழ்ந்த இரவு உறக்கம் மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். இது கருவளையத்தை நீக்குவதோடு, புத்துணர்ச்சியை கொடுக்கும்.

4. உடற்பயிற்சி (Exercise)

தினமும் மிதமான உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். அல்லது மிதமான நடைப்பயிற்சி தினமும் அரை முதல் 1 மணிநேரம் செய்வது மிகவும் நல்லது. திருமணத்துக்கு பின்பும் இதைப் பின்பற்றலாம்.

5. மனநலன் (Mental Health)

திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்நோக்கி வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொள்ளவேண்டும்.

Share this post