ரஜினியுடன் நடிக்க கமிட் ஆன மீனா, நக்மா, ஷாலினி, சிம்ரன்.. எந்த படம் தெரியுமா?
சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. நம்ம தமிழ் சினிமாவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் உச்சத்திற்கு சென்ற நடிகர்களில் ரஜினி முக்கியமானவர்.
தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற ரஜினிகாந்த் நடித்து பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளன. அதில் முக்கியமான படம், 1999ல் வெளியான படையப்பா திரைப்படம்.
தமிழ் சினிமாவில் பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சிவாஜி, ரஜினி, லட்சுமி, ரம்யாகிருஷ்ணன், செந்தர்யா, நாசர், ராதாரவி என பட்டியல் மிகவும் பெரியது.
எல்லா காதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படையப்பா படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ரஜினியின் கேரியரில் முக்கிய திரைப்படமாகவும், ரசிகர்கள் மனதில் இன்றளவும் இந்த படத்துக்கு தனியிடம் உண்டு.
ரம்யாகிருஷ்ணன் வில்லியாக மிரட்டி இருப்பார், சௌந்தர்யா அழகு தேவதையாக வந்து செல்வார், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் BGM முதல் பாடல் வரை அனைத்துமே வேற லெவல் ஹிட்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க வேண்டிய முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, படம் உருவான போது யார் யாரெல்லாம் நடிக்க வைக்கலாம் என கேஎஸ்ரவிக்குமார், ரஜினிகாந்த் இடையே பல தேர்வு நடந்துள்ளது.
அதில் முதலில் கமிட் ஆனது நடிகை மீனா. வில்லியாக நக்மாவை நடிக்க வைக்கலாம் என பேசப்பட்டது, பின்னர் வில்லியாக ஐஸ்வர்யா ராய், கதாநாயகியாக சிம்ரனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை எழுந்தது. தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஷாலினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் கேஎஸ் ரவிக்குமாருக்கு உடன்பாடு ஏற்படாததால் கடைசியில் ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்கயா, சித்தாரா என அத்தனை நடிகர்களையும் மாற்றினார். உண்மையில் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு வேறு யாரும் பொருத்தமாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.