வளர்ப்பு மகனால் வந்த குடைச்சல்.. ஜெயம் ரவி விவாகரத்தில் புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்..!

Jayam Ravi's Divorce Confused Celebrity 280624

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து லிஸ்ட் பெருசாகிக் கொண்டே உள்ளது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள ஜெயம் ரவி ஆரத்தி தம்பதியினரை குறித்து சில பத்திரிகைகளில் ஜெயம் ரவி ஆரத்திக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டது விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

Jayam Ravi's Divorce Confused Celebrity 280624

சிலர் இதுபோன்ற செய்திகள் உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தியே என்றும் சொல்லி வந்தனர். மேலும், ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இந்த சூழலில் ஜெயம் ரவி ஆரத்திற்கு இடையே பிரச்சனை வர 25 கோடி ரூபாய் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. சைரன் படத்தை தொடர்ந்து ஆரத்தியின் அம்மா ஜெயம் ரவியை வைத்து பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார்.

Jayam Ravi's Divorce Confused Celebrity 280624

ஜெயம் ரவிக்கு 25 கோடி சம்பளம் கேட்டதால் ஆர்த்தியின் அம்மா சுஜாதா முடியாது என்று கூறியதால் சண்டை ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளரான சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா வீட்டில் சங்கர் என்ற நபர் இருக்கிறார். அவர் சுஜாதாவின் வளர்ப்பு மகன். அவர்தான் தயாரிப்பு பணிகளை முழுமையாக கவனித்துக் கொள்வதால், ஒரு கட்டத்தில் சங்கருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

Jayam Ravi's Divorce Confused Celebrity 280624

இதனால், ஷங்கர் சொல்வதை ஜெயம் ரவி கேட்க வேண்டும் என்று ஆரத்தியின் அம்மா சுஜாதா கட்டாயப்படுத்தியுள்ளார். ஜெயம் ரவி அதற்கு மறுத்துவிட்டதால், அந்த கோபத்தை ஆரத்தியின் மீது காட்டியதால் தான் தற்போது, விவாகரத்து வரை வந்திருப்பதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி இருக்கிறது.

Share this post