இது கொஞ்சம் ஓவரா தெரியல.. பள்ளி புத்தகத்தில் நடிகை தமன்னாவின் வரலாறு..!

Biography of Tamannaah in class 7 school text book 270624

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலமாக அறிமுகமானவர் தமன்னா. ஆனால், அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம் தான் கிடைத்தது. அடுத்தடுத்து, வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தற்போது, டாப் நடிகையாக உச்சத்தில் இருக்கிறார் தமன்னா.

Biography of Tamannaah in class 7 school text book 270624

பல படங்களில் தற்போது, பிஸியாக நடித்து வந்தாலும் கிளாமரில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் இருக்கும் தனியார் பள்ளியில் நடிகை தமன்னா குறித்த பாடம் எடுக்கப்பட்டது தற்போது, சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் ஜெயபால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை வரலாறு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

Biography of Tamannaah in class 7 school text book 270624

சிந்திப் பிரிவினைக்குப்பின் முக்கிய மக்கள் வாழ்க்கை என்று பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது. இதனை அறிந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் தற்போது எதிர்ப்பு தெரிவித்தனர். தமன்னா பற்றி எங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பி பள்ளி அசோசியேஷனில் புகார் அளித்து வருகின்றனர்.

Share this post