அட இது புதுசா இருக்கே.. ப்பா தலைகீழ் யோகா… வேற லெவலில் மாஸ் காட்டிய கோமாளி பட நடிகை..! (video)

வாட்ச்மேன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இருப்பினும், கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு முன்னாள் காதலியாக நடித்ததே மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கொடுத்தது. முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மன்மத லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படத்தில், லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். வயசான கணவர் ஜெயபிரகாஷிடம் இருந்து தனது கள்ளக்காதலனை ஒழித்து வைக்க அவர் படும் போராட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை கொடுத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் தொடர்ந்து தன்னுடைய மிரட்டலான நடிப்பையும் கவர்ச்சியையும் வெளிக்காட்டி வருகிறார்.
சமூக வலைதளங்களில், ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது, பாலிவுட் நடிகைகளே மிரளும் அளவிற்கு சூடான கவர்ச்சியை வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், 26 வயதை நிரம்பிய சம்யுக்தா ஹெக்டே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் வழக்கத்தை கொண்டவர்.
அது மட்டுமல்லாமல், ஒரு சிறந்த யோகா கலைஞரும் கூட இந்நிலையில், இன்று உலக யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தனது ரசிகர்களை கவரும் வகையில் யோகா செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். சம்யுக்தா ஹெக்டே வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘இன்னிக்கு புல் மீல்ஸ் கன்பார்ம்’ என அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.