GV பிரகாஷுடன் விவாகரத்து.. பிரபல VJ கேட்ட கேள்வியால் கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி..!

singer-saindhavi-cries-in-saregamapa-show 250624

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் மிகவும் ஹிட்டாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில், கிடைக்கும் மேடையில் தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும் என பல கலைஞர்கள் போட்டி போட்டு பாடல் பாடி வருகிறார்கள். இந்த சரிகமப நாலாவது சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

singer-saindhavi-cries-in-saregamapa-show 250624

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த எபிசோடில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்று இருந்தது. பாடகி சைந்தவி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2000 ஆண்டு மகள் பிறந்தார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மே மாதத்தில் இருவரும் விவாகரத்தை அறிவித்தார்கள்.

singer-saindhavi-cries-in-saregamapa-show 250624

இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் சைந்தவி எமோஷனலாகி கண்ணீர் விட்டு அழுத்திருக்கிறார். கடந்த எபிசோடில் டெடிகேஷன் ரவுண்ட் நடந்தது. அதில், போட்டியாளர் ஸ்வேதா தன்னுடைய தந்தைக்கு ஆனந்த யாழை பாடலை பாடி டெடிகேட் செய்துள்ளார். அப்போது, அர்ச்சனா சைந்தவியிடம் உங்களது அப்பா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு, அழுது கொண்டே பேசிய சைந்தவி நான் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு இப்படி இருப்பதற்கு முக்கிய காரணமே என்னுடைய அப்பாதான் நான் செய்யும் விஷயங்களில் சரி எது தவறு எது என எண்ணை வழிநடத்துவது அவர்தான் உடனே நிகழ்ச்சியில், தனது அப்பாவை பார்த்தது சைந்தவி அவரை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்.

Share this post