செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு.. First லுக் போஸ்டரை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

/simbu-selvaraghavan-shelved-movie-250624

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த மற்றும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் படம் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் செல்வராகவன். 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது தம்பியான தனுஷை அறிமுகமும் செய்து வைத்தார். தான் கடந்து வந்த இளமைக்கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த படத்தில் காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினர் இப்படத்திலும் தன்னுடைய தம்பியான தனுஷை ஹீரோவாக நடிக்க வைத்தார்.

/simbu-selvaraghavan-shelved-movie-250624

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் சிறு வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. எந்தவிதமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் திறன் இவருக்கு உண்டு. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பத்து தல திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து, தற்போது கமலஹாசன் உடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ராஜ்கமல் நிறுவனத்தில் தயாரிக்கும் எஸ் டி ஆர் 48 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

/simbu-selvaraghavan-shelved-movie-250624

இந்த நிலையில், சிம்பு நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் கான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளிவந்த நிலை படப்பிடிப்பு துவங்காமல் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ச்சே, படம் மட்டும் வந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே என்று உச்சிக்கொட்டி வருகிறார்கள்.

/simbu-selvaraghavan-shelved-movie-250624

Share this post