ஆளே டோட்டலாக மாறிய லெஜண்ட் சரவணன் - இணையத்தில் தீயாய் பரவும் நியூலுக் போட்டோ..!
இந்தியாவின் பிரபலமான சென்னையின் தொழிலதிபர்களில் ஒருவரான லெஜன்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி பொங்கல் நாட்களில் கலர் கலராக உடைய அணிந்து கொண்டு இளம் நடிகர்களுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக் கொண்டிருந்தார். இவரது, நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்களும் கேலி கிண்டல்களும் வெளியானது.
அவையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் இவர் தன்னுடைய வேலைகளை சரியாக செய்து கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில், அந்த விளம்பரத்திற்காக மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம், அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை துளிர்விட்ட சமயத்தில், அதற்காக தன்னிடம் கொட்டிக் கிடக்கும் பல கோடிகளை சினிமாவில் இன்வெஸ்ட் செய்து தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் தி லெஜெண்ட் .
பல கோடி செலவு செய்து இப்படத்தில் நடித்தாலும், பெரிதாக இப்படம் லாபத்தை ஈட்ட வில்லை. ஆனால், இப்படத்தின் மூலம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டு போகாமல் தற்போது, மீண்டும் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். அண்மையில், கூட இவர் தனது லுக்கை மாற்றி சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
தற்போது, தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார். அதுவும், ஆளே டோட்டலாக மாறிப் போய் வித்தியாசமான அளவுக்கு இப்படத்தில் நடிக்க உள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியது. கருடன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லெஜெண்ட் சரவணன் துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் அளித்த பேட்டியில், லெஜெண்ட் சரவணன் படம் குறித்து பேசியுள்ளார். இதில், லெஜெண்ட் சரவணன் படத்தை முடித்துவிட்டு படத்திற்கான கதையை அவரிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது, ஒரு நடிகரை விட அருமையான திரைக்கதை மிகவும் அவசியம் என கருடன் மற்றும் மகாராஜா ஆகிய படங்கள் நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். துரை செந்தில்குமார், லெஜன்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் இப்படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.