அட அட அட.. கேக் மாதிரி இருக்கீங்க.. ஒவ்வொன்னும் சும்மா ஜிவ்வுன்னு இருக்கு.. சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

கல்லூரி படிக்கும் காலம் முதலே பேஷன் ஷோக்களில் பங்கேற்று வந்தவர் நடிகை சனம் ஷெட்டி. இந்நிலையில், 2004ம் ஆண்டு மிஸ் பெங்களூர் போட்டியில் பங்கேற்றார். பின்னர், சாப்ட்வெர் கம்பெனியில் பணியாற்ற தொடங்கிய இவர், வேலைக்காக UK சென்றார்.
அங்கு documentary படங்களில் நடித்து வந்தார். மீண்டும் சென்னை வந்த இவர், வார இறுதி நாட்களில் சில பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வந்தார். மேலும், The New Indian Express மூலம் சென்னையின் டாப் மாடல்களில் ஒருவர் என சொல்லப்பட்டிருந்தார்.
இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது. தமிழ் மொழியில் அம்புலி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், மாயை, தொட்டால் விடாது, கதம் கதம், கலை வேந்தன், தகடு, சதுரம் 2, வால்டர், ஊமை செந்நாய், மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது போட்டோஸ், வீடியோக்களை பதிவிடுவது மட்டுமல்லாது சமூக விஷயங்கள் குறித்தும் பதிவிடுவார்.