அந்த இடத்தில் டாட்டூ.. அதை காட்ட க்ளோசப்பில் இப்படியொரு போஸ்.. அனுபமாவின் ஹாட் க்ளிக்

மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் சுருள் முடியோடு ரசிகர்களை கவர்ந்த அனுபமா, அதனைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தெலுங்கு மொழிகளில் நடிக்கத் தொடங்கிய அனுபமா, தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி ரசிகர்களை கவர்ந்தார். உடல் எடை மெலிந்து ஸ்லிம் பிட்டாக மாறியுள்ள அனுபமா, தள்ளி போகாதே என்னும் தமிழ் படத்தில் நடித்தார்.
சமீபத்தில், ரவுடி பாய்ஸ், அடடே சுந்தரா, கார்த்திகேயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது, தெலுங்கு மொழியில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தற்போது கழுத்துக்கு கீழ் பகுதியில் புதிய டேட்டூ ஒன்றினை போட்டுள்ளார். அதை காட்ட க்ளோசப் செல்ஃபியில் அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ வைரலாகி வருகிறது.