இப்டியே போனா அடுத்த கிரண் நீங்க தான்.. அரைகுறை உடையில் உறைய வைக்கும் அபிராமி !

மாடலிங் துறையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். சன் டிவியில் ‘ஸ்டார் வார்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இவர், ‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர், ஹிந்தியில், அமிதாப் பச்சன், டாப்சீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் நல்ல ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், வல்லமை தாராயோ என்னும் வெப் சீரிஸ், விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி என அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தற்போது நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர், பெரிய படங்கள் மற்றும் சீரியல்களில் தென்படாத நிலையில்,
இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் OTTக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் அவர் தனது முன்னாள் காதலனான நிரூப் உடன் சண்டை போட்டது, சிகரெட் பிடித்தது என ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கி 5வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பின்னர் சில படங்களில் கமிட் ஆகியுள்ள இவர், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள மற்றும் புது வாய்ப்புகளுக்காகவும் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார். தற்போது, இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கிரண் ரத்தோட் விட மிஞ்சிருவீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.