நம்ம ஜாக்குலினா.. ஒரே செல்ஃபியால் ஷாக் கொடுத்த ஜாக்குலின் ! ரொம்ப தைரியம் தான் போங்க !

Vj jacqueline selfie photo with tiger in thailand tiger park shocks fans

விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட அந்த சேனலில் பணியாற்றும் விஜேக்களுக்கு வரவேற்பு அதிகம். அந்த வகையில், விஜேவாக அறிமுகமாகி சீரியலில் நடித்து நடிகையாக மாறியவர் ஜாக்குலின்.

Vj jacqueline selfie photo with tiger in thailand tiger park shocks fans

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து, தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். சின்னத்திரை நடிகையாக மட்டுமல்லாது கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Vj jacqueline selfie photo with tiger in thailand tiger park shocks fans

கொஞ்ச நாட்களாக திரையில் பெரிதும் தலைகாட்டாமல் இருக்கும் ஜாக்குலின், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.

Vj jacqueline selfie photo with tiger in thailand tiger park shocks fans

இந்நிலையில், சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள இவர், டைகர் பார்க் சென்றுள்ளார். அப்போது, உண்மையான புலியுடன் செல்ஃபி ஒன்றை எடுத்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த டைகர் உண்மையா பொய்யா என குழம்பி போயுள்ளனர். இன்னும் சிலர் ரொம்ப தைரியம் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Vj jacqueline selfie photo with tiger in thailand tiger park shocks fans

Share this post