வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட், விடுமுறை ரத்து..! எச்சரிக்கை..!

Tamilnadu Transport Staffs Strike Mrach Govermnet Warning Salalry Leave

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தொழில்சங்கங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு வேலை நிறுத்தங்கள் இடையூறு ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.மேலும், மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்சென்ட் என்று குறிப்பிட்டு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.அதுமட்டுமல்லாமல், பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share this post