தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்'க்கு நன்றி - தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரல் ட்வீட் !

Stalin tweets about rajinikanth phone call viral

முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி மகனும் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்க்கை வரலாற்றை உங்களில் ஒருவன் என்ற பெயரில் பல பாகங்கள் கொண்ட புத்தகமாக எழுதி வருகிறார்.

Stalin tweets about rajinikanth phone call viral

அதில் முதல் பாகம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வெளியிட்டார்.

இந்தப் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Stalin tweets about rajinikanth phone call viral

உங்களது ஒருவன் பாகம் 1ல் முதல்வர் ஸ்டாலின் தனது ஆரம்பகால வாழ்க்கை அதாவது, அதில் தனது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் போன்றவற்றை குறித்து எழுதியுள்ளது. 1976ம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை அதில் பதிவு செய்துள்ளார்.

இந்த புத்தகம் குறித்த கருத்துக்களை பலரும் பதிவிட்டு வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து பாராட்டிப் பேசியுள்ளார்.

Stalin tweets about rajinikanth phone call viral

இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த ட்வீட்டில் “‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!’

என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Share this post